Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஜன.20ல் மோடி ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடுகிறார்: அதிகாரிகள் ஆய்வு

ஜன.20ல் மோடி ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடுகிறார்: அதிகாரிகள் ஆய்வு

ஜன.20ல் மோடி ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடுகிறார்: அதிகாரிகள் ஆய்வு

ஜன.20ல் மோடி ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடுகிறார்: அதிகாரிகள் ஆய்வு

ADDED : ஜன 18, 2024 02:18 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்:-ஜன., 20ல் பிரதமர் மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்கிறார். இதைமுன்னிட்டு கோயிலில் பாதுகாப்பு குறித்து நேற்று மத்திய, மாநில பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இலங்கையில் ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு ராமேஸ்வரம் வந்தார். அப்போது ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, சீதை ராமேஸ்வரம் கடல் மணலில் சிவலிங்கம் வடிவமைத்து பூஜை செய்தனர். ராமரே, சிவனை வணங்கி பூஜித்ததால் ராமேஸ்வரம் கோயிலுக்கு ராமநாதசுவாமி என பெயர் எழுந்தது. ராமர் வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடைய இக்கோயிலில் புனித நீராடி விட்டு, தீர்த்தத்தை அயோத்தி ராமர் கோயிலுக்கு எடுத்துச்செல்ல ஜன.,20ல் பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.

இங்குள்ள 22 தீர்த்தங்களில் பிரதமர் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். அன்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார். ஜன.,21ல் கோதண்டராமர் கோயிலுக்கு காரில் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். தனுஷ்கோடி கடற்கரைக்கு செல்கிறார். பின் கலசத்தில் சேகரித்த கோயிலின் 22 புனித தீர்த்தத்தை எடுத்து கொண்டு அயோத்தி செல்கிறார்.

அதிகாரிகள் ஆய்வு


பிரதமரின் வருகையையொட்டி நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு டில்லியிலிருந்து தேசிய பாதுகாப்புபடை உயர் அதிகாரி, ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன், எஸ்.பி., சந்தீஷ், மாநில பாதுகாப்பு படை பிரிவு எஸ்.பி., கார்த்திக், மத்திய, மாநில உளவு பிரிவு அதிகாரிகள் வந்தனர். இவர்கள் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்த கிணறுகள், சுவாமி, அம்மன் சன்னதிக்கு பிரதமர் செல்லும் வழித்தடத்தை ஆய்வு செய்தனர். பின் பாதுகாப்பு குறித்து தனியார் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பிரதமர் ஹெலிகாப்டரில் வரவாய்ப்புள்ளதால் மண்டபம் ெஹலிபேடு மைதானத்தை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.

பிரதமர் பயண திட்டம்


கேலோ இந்தியா விளையாட்டுகள் துவக்க நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜன., 19 மாலை 5:00 மணிக்கு பிரதமர் மோடி சென்னை வருகிறார். ஜன.,20 காலை விமானத்தில் திருச்சி செல்கிறார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றுவிட்டு மதியம் 12:55 மணிக்கு ெஹலிகாப்டரில் ராமேஸ்வரம் புறப்படுகிறார்.மதியம் 2:00 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் அவர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஜன.,21 காலை 11:20 மணிக்கு ெஹலிகாப்டரில் புறப்பட்டு மதியம் 12:20 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். பின்னர் 12:25 மணிக்கு டில்லி புறப்பட்டு செல்கிறார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us