/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 'மைனர்' காதல் ஜோடி ராமேஸ்வரத்தில் மீட்பு 'மைனர்' காதல் ஜோடி ராமேஸ்வரத்தில் மீட்பு
'மைனர்' காதல் ஜோடி ராமேஸ்வரத்தில் மீட்பு
'மைனர்' காதல் ஜோடி ராமேஸ்வரத்தில் மீட்பு
'மைனர்' காதல் ஜோடி ராமேஸ்வரத்தில் மீட்பு
ADDED : மே 21, 2025 02:51 AM
ராமநாதபுரம்:ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமான நிலையில், ஒரு சிறுமி, சிறுவன் நின்று கொண்டிருந்தனர். அங்கிருந்த குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வலர்கள், இருவரிடமும் விசாரித்தனர்.
இதில், அவர்கள் ஊட்டியை சேர்ந்தவர்கள் எனவும், சிறுவன் பிளஸ் 2 மாணவர், சிறுமி பத்தாம் வகுப்பு மாணவி எனவும் தெரியவந்தது. இருவரும் காதலித்ததை பெற்றோர் கண்டித்ததால், திருமணம் செய்து கொள்ளலாம் என, ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளனர்.
பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, இருவரையும் ஊட்டி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைத்தனர். பின், பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.