/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நெல் குவிண்டாலுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.3000 எதிர்பார்ப்பு நெல் குவிண்டாலுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.3000 எதிர்பார்ப்பு
நெல் குவிண்டாலுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.3000 எதிர்பார்ப்பு
நெல் குவிண்டாலுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.3000 எதிர்பார்ப்பு
நெல் குவிண்டாலுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.3000 எதிர்பார்ப்பு
ADDED : மே 31, 2025 11:18 PM

ராமநாதபுரம்:தமிழக அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ.3000 வழங்க வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் எம்.எஸ்.கே. பாக்கியநாதன் கூறியதாவது:
காரீப் பருவத்தில் 14 வகை பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை 3 சதவீதம் உயர்த்தி ரூ.69 வழங்கவும், சாதாரண ரகம் குவிண்டாலுக்கு ரூ.2369, சன்ன ரகத்திற்கு ரூ.2389 என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2369, தமிழக அரசின் பங்களிப்பு தொகை ரூ.105 மொத்தமாக ரூ.2474, சன்னரகம் ரூ.2389 தமிழக அரசின் பங்களிப்பு தொகை ரூ.130 என மொத்தமாக ரூ.2519 வழங்கப்படுவதை உயர்த்தி குவிண்டால் ஒன்றிற்கு ரூ.3000 வழங்க வேண்டும்.
தற்போது அறிவித்துள்ளது போதுமானதாக இல்லை. பருவ நிலை மாற்றங்கள், இயற்கை சீற்றம், உழவுக்கூலி, விதை நெல், அறுவடைக்கூலி, உரங்கள் விலை ஏற்றம், வங்கி கடன்கள் போன்ற காரணங்களால் நெல் விளைச்சலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பணமோ, முதலீடோ கிடைப்பதில்லை.
சுவாமிநாதன் குழு பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஆதார விலையை ஒப்பீடு செய்து வழங்குவதில்லை. தமிழக அரசின் ஆண்டு தேவை 90 லட்சம் டன், தற்போது தமிழகத்தில் 70 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 20 லட்சம் டன் அரிசியை அண்டை மாநிலங்களில் இருந்து வாங்குவது தொடர்கிறது.
இந்திய அளவில் உணவு உற்பத்தியில் தமிழகம் 14 வது இடத்தில் மிகவும் பின் தங்கியே உள்ளது. தெலுங்கானா மாநிலம் உற்பத்தி மானியத்தை விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கிறது. சட்டீஸ்கர் மாநிலத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3100 வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் நான்காண்டு நிறைவு செய்துள்ள அரசு ரூ.2500 என்பதை ரூ.3000 ஆக வழங்க வேண்டும். மானிய திட்டங்களை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என்றார்.