/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வேம்பாரில் தடுப்பணை தேவை கூட்டத்தில் தீர்மானம் வேம்பாரில் தடுப்பணை தேவை கூட்டத்தில் தீர்மானம்
வேம்பாரில் தடுப்பணை தேவை கூட்டத்தில் தீர்மானம்
வேம்பாரில் தடுப்பணை தேவை கூட்டத்தில் தீர்மானம்
வேம்பாரில் தடுப்பணை தேவை கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஜூன் 18, 2025 11:31 PM
சாயல்குடி: வேம்பார் கடலுக்குள் வீணாக செல்லும் வெள்ள நீரை பாதுகாக்க தடுப்பணை தேவை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாயல்குடியில் இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் - லெனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.,எம்.எல்.,) கடலாடி தாலுகா பேரவை கூட்டம் நேற்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் செவல்பட்டி அந்தோணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிம்சன் முன்னிலை வைத்தார். கடலாடி தாலுகா செயலாளர் பி.முருகேசன் வரவேற்றார்.
கூட்டத்தில் சாயல்குடியில் கழிவுநீர் கால்வாயை மீண்டும் அமைத்து முறைப்படுத்த வேண்டும் மற்றும் வெள்ள காலங்களில் வடிநீர் முறையாக செல்லாமல் குடியிருப்புகளில் புகுவதால் சந்தன மீரா ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தேவையான இடங்களில் பாலம் கட்ட வேண்டும்.
செவல்பட்டி ஓடை ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளதால் தண்ணீர் தேங்க வழியின்றி உள்ளது. அவற்றை துார்வாரி விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் பாதுகாக்க வேண்டும். எஸ்.தரைக்குடி மற்றும் செவல்பட்டியில் இருந்து வெள்ள காலங்களில் வெளியேறும் உபரி நீர் பெருவாரியாக வேம்பார் கடலில் கலந்து வீணாகிறது. இவை ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிறது.
எனவே இப்பகுதியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழித்தடத்தை துார்வாரி முறையாக தடுப்பணை எழுப்ப வேண்டும் என்பது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தாலுகா செயலாளராக முருகேசனும், நகர் செயலாளராக விஜய்,
கிளை செயலாளராக உறைகிணறு செல்வராஜ், கிழக்கு பகுதி செயலாளராக செவல்பட்டி மருதநாயகம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.