/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மார்க்சிஸ்ட் கம்யூ., டூவீலர் பிரசாரம் மார்க்சிஸ்ட் கம்யூ., டூவீலர் பிரசாரம்
மார்க்சிஸ்ட் கம்யூ., டூவீலர் பிரசாரம்
மார்க்சிஸ்ட் கம்யூ., டூவீலர் பிரசாரம்
மார்க்சிஸ்ட் கம்யூ., டூவீலர் பிரசாரம்
ADDED : ஜூன் 20, 2025 11:31 PM
உத்தரகோசமங்கை:- உத்தரகோசமங்கை அருகே பனையடியேந்தலில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி டூவீலர் பிரசாரம் நடந்தது. தாலுகா செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயற்குழு காசிநாததுரை, நகராட்சி கவுன்சிலர் சூரியகலா, மகாலிங்கம், மாரியப்பன், முனியாண்டி, உடையாள், மோர்க்குளம் பழனிச்சாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பனையடியேந்தல், மரியராயபுரம், உத்தரகோசமங்கை, கீழச்சீத்தை, களரி, ஆனைகுடி, மோர்க்குளம் வழியாக கீழக்கரையில் வந்து நிறைவடைந்தது. குறிப்பிட்ட இடங்களில் டூவீலர்களை நிறுத்தி தெருமுனை பிரசாரம் செய்யப்பட்டது.