ADDED : ஜூன் 08, 2025 11:13 PM
தொண்டி: தொண்டி புதுக்குடி கடலில் உலக கடல் தினத்தை முன்னிட்டு, அம்ருதா விஸ்வ வித்யாபீடம் சார்பில் சீகிராஸ் நடவு மற்றும் மீன் உயிர்ப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் அம்ருதா விஸ்வா வித்யாபீடம் எட்டிமடை வளாகத்தை சேர்ந்த மாணவர்கள், பேராசியர்கள் பங்கேற்றனர்.
சீகிராஸ் என்பது கடல் சூழலுக்கு தேவைப்படும் முக்கிய மூலத்தன்மையை வழங்கும் உயிரி.
இது கடற்கரையை பாதுகாப்பது, கடல் சார் உயிரணங்களுக்கு உணவாகவும், இனபெருக்க இடமாகவும் இருப்பது போன்ற சேவைகளை வழங்குவது குறித்து மீனவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.