ADDED : செப் 07, 2025 10:57 PM
பரமக்குடி : பரமக்குடி அருகே சோமநாதபுரம் விலக்கு ரோடு, மதுரை, ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் கலைஞர் நுாலகம் திறக்கப்பட்டது.
பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் ஏற்பாட்டில் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு போட்டி தேர்வுகளை எழுதும் மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, இளைஞர் அணி துணை செயலாளர் ராஜா, நகர் இளைஞர் அணி அமைப்பாளர் (தெற்கு) துரைமுருகன் பங்கேற்றனர்.