கமுதி; கமுதி அருகே கிளாமரம் கிராமத்தில் சந்தன மாரியம்மன், பட்டத்தரசி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு கோயில் வளாகத்தில் 108 விளக்கு பூஜையில் விளக்கு ஏற்றி, போற்றி பாடல்கள் பாடி அம்மனை வழிபட்டனர்.
சந்தன மாரியம்மன், பட்டத்தரசி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சந்தன மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.