Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோயில்களில் கும்பாபிேஷகம்: பக்தர்கள் பரவசம்

கோயில்களில் கும்பாபிேஷகம்: பக்தர்கள் பரவசம்

கோயில்களில் கும்பாபிேஷகம்: பக்தர்கள் பரவசம்

கோயில்களில் கும்பாபிேஷகம்: பக்தர்கள் பரவசம்

ADDED : செப் 04, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அழகன்குளம் கிரமத்தில் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது.

செப்.,3ல் யாகசாலை பூஜைகள் துவங்கி நேற்று காலையில் கும்ப கலசங்கள் புறப்படாகி கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. அம்மனுக்கு அபிேஷகம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

இதே போன்று வாணி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிேஷக விழா நடந்தது.

செப்.,1ல் யாகசாலை பூஜைகள் துவங்கி 3 கால யாக பூஜைகள் செய்து, நேற்று (செப்.,4) காலையில் கோபுர கலசத்தில் கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் அம்மன், பிரியா விநாயகர், சிவகாமி சமேத நடராஜர் பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

கீழக்கரை கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. புதிதாக கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10:15 மணிக்கு மூலவர்கள் மங்கள விநாயகர், முத்து மாரியம்மன், பதினெட்டாம்படி கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் முளைப்பாரி ஊர்வலம், இரவில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை மங்களேஸ்வரி நகர் முத்தரையர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

முதுகுளத்துார் முதுகுளத்துார் அருகே பொக்கானரேந்தல் கிராமத்தில் சித்தி விநாயகர், வாழவந்தாள் அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

இதனை முன்னிட்டு கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை முதல் கால யாக பூஜை, பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம், மஹா பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது.

பிறகு காலை 9:30 மணிக்கு மேல் கடம் புறப்பாட்டுக்கு பிறகு விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. சித்தி விநாயகருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்துார் பகுதியில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

பரமக்குடி பரமக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன், வாணி கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.

கோயிலில் செப்.,2 காலை அனுக்ஞை, விநாயக பூஜையுடன் விழா துவங்கியது. அன்று மாலை தீர்த்த குடங்கள் யாகசாலை பிரவேசமாகி, இரவு முதல் காலை ஆகம பூஜைகள் நடந்தது.

நேற்று காலை யாகசாலையிலிருந்து குடங்கள் புறப்பாடாகி விமான கலசங்களை அடைந்தன. 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. அனைவருக்கும் பிரசாதங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.

பரம்பரை அறங்காவலர் ஜீவானந்தம், திருப்பணி கவுரவ தலைவர் நாகரத்தினம், தலைவர் ஆடிட்டர் தினகரன், செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் பூமிநாதன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us