/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நின்ற லாரி மீது பஸ் மோதி கர்நாடக ஐயப்ப பக்தர் பலிநின்ற லாரி மீது பஸ் மோதி கர்நாடக ஐயப்ப பக்தர் பலி
நின்ற லாரி மீது பஸ் மோதி கர்நாடக ஐயப்ப பக்தர் பலி
நின்ற லாரி மீது பஸ் மோதி கர்நாடக ஐயப்ப பக்தர் பலி
நின்ற லாரி மீது பஸ் மோதி கர்நாடக ஐயப்ப பக்தர் பலி
ADDED : ஜன 10, 2024 11:43 PM

கீழக்கரை:-ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கர்நாடக ஐயப்ப பக்தர்கள் வந்த சுற்றுலா பஸ் மோதிய விபத்தில் பக்தர் ஒருவர் பலியானார். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி புல்லந்தை சர்ச் அடுத்த கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் திருநெல்வேலியில் இருந்து ஹாலோ பிளாக் ஏற்றி வந்த லாரி நின்று கொண்டிருந்தது. உச்சிப்புளி அருகே சேர்வைக்காரன் ஊரணியைச் சேர்ந்த அதன் டிரைவர் முனியசாமி 39, அருகே நின்று கொண்டிருந்தார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று விட்டு திருச்செந்துாரில் சுவாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் சாயல்குடி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் ராமேஸ்வரம் செல்ல நேற்று அதிகாலை 1:30 மணிக்கு சுற்றுலா பஸ்சில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராமல் பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த சந்தீப் 30, சம்பவ இடத்தில் பலியானார். மேலும் 14 ஐயப்ப பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.