/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கள்ளழகர் பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர் பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்பினார்
கள்ளழகர் பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்பினார்
கள்ளழகர் பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்பினார்
கள்ளழகர் பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்பினார்
ADDED : மே 17, 2025 12:50 AM

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இருந்து மீண்டும் நேற்று மாலை கோயிலுக்கு திரும்பினார்.
பரமக்குடி சவுராஷ்டிராபிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே 7ல் காப்பு கட்டுதலுடன் துவங்கி நடந்தது.
மே 12 அதிகாலை 3:20 மணிக்கு கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி தாமிர பாத்திரத்தில் பால் சோறு சாப்பிட்டபடி வைகை ஆற்றில் இறங்கினார்.
அன்று காலை 9:35 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகிய கள்ளழகரை பல்லாயிரம் பக்தர்கள் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். தொடர்ந்து ஆயிரம் பொன் சத்திரத்தில் எழுந்தருளிய பெருமாள் அதிகாலை 2:00 மணிக்கு வண்டியூர் காக்கா தோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார்.
மறுநாள் சேஷ வாகனத்தில் பெருமாள் அலங்காரமாகி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து விடிய விடிய தசாவதார சேவையிலும் அருள் பாலித்தார். பின்னர் கருட வாகனத்திலும், முத்து பல்லக்கில் 10 ஆயுதங்களுடன் ராஜாங்க திருக்கோலத்தில் வலம் வந்தார்.
நேற்று காலை கிரி மண்டகப்படியில் இருந்து கள்ளழகர் சங்கு, சக்கரம்,வாள், செங்கோல், ஈட்டி, வளரி, கண்ணக்கோல் ஆகிய ஆயுதங்களை ஏந்தி கோடாரி கொண்டையிட்டு நெல்மணி தோரணங்கள் சூடி மீண்டும் பூப்பல்லக்கில் அமர்ந்தார்.
தொடர்ந்து நகர் முழுவதும் முக்கிய வீதிகள் வழியாக பமாலை 5:00 மணிக்கு கோயிலை அடைந்தார்.
அப்போது கருப்பண்ணசுவாமியிடம் விடை பெற்று சென்ற பெருமாள் மீண்டும் கருப்பணின் உத்தரவை பெற்று மாலை 6:00 மணிக்கு கோயிலை அடைந்தார். அங்கு அழகர் மறைபொருளாக கண்ணாடியில் காட்சி அளிக்கும் கண்ணாடி சேவை நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர்.


