ADDED : ஜூன் 23, 2025 11:31 PM
பரமக்குடி: பரமக்குடி எம்.எஸ்.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தராம்பாள் 70. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு வீட்டில் இருந்துள்ளார். அப்போது மர்ம நபர் தாகமாக இருப்பதாக குடிக்க தண்ணீர் கேட்டு வந்துள்ளார்.
தண்ணீர் கொடுத்த போது கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளான்.
சுந்தராம்பாள் புகாரில் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.