Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரோட்டில் 'பஞ்சர் ஒட்டியும்' பயனில்லை

ரோட்டில் 'பஞ்சர் ஒட்டியும்' பயனில்லை

ரோட்டில் 'பஞ்சர் ஒட்டியும்' பயனில்லை

ரோட்டில் 'பஞ்சர் ஒட்டியும்' பயனில்லை

ADDED : மார் 28, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
ஆர்.எஸ்.மங்கலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் பகுதி ரோட்டில் பள்ளங்களை சீரமைக்கும் பணி சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. பள்ளங்களில் தார் கலந்த ஜல்லியை கொட்டி மூடிய பணியாளர்கள், இயந்திரம் மூலம் சமப்படுத்தவில்லை.

பள்ளங்கள் தற்போது ரோட்டை விட மேடாக உயர்ந்துள்ளன. ரோட்டில் உள்ள பள்ளங்களில் பஞ்சர் ஒட்டுவது போல், ஆங்காங்கே போடப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள் சில நாட்களிலேயே பெயர்ந்து சிதறி கிடக்கின்றன.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குகின்றனர். குறிப்பாக உப்பூர் ரோடு ஆவரேந்தல், பாரனுார், ஊரணங்குடி, வெட்டுக்குளம் விலக்கு, ஆர்.எஸ்.மங்கலம் டி.டி.மெயின் ரோடு, பரமக்குடி ரோடு பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படாததன் காரணமாகவும், ரோட்டின் பள்ளம் மேடாகி உள்ளதாலும், டூ வீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

முழுமையாக சீரமைக்காமல் அப்படியே ஜல்லிகற்களை பெயரளவில் கொட்டிச் சென்றதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us