/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அயோத்தி ராமர் கோயிலுக்கு வருமாறு ராமேஸ்வரம் மக்களுக்கு அழைப்பிதழ்அயோத்தி ராமர் கோயிலுக்கு வருமாறு ராமேஸ்வரம் மக்களுக்கு அழைப்பிதழ்
அயோத்தி ராமர் கோயிலுக்கு வருமாறு ராமேஸ்வரம் மக்களுக்கு அழைப்பிதழ்
அயோத்தி ராமர் கோயிலுக்கு வருமாறு ராமேஸ்வரம் மக்களுக்கு அழைப்பிதழ்
அயோத்தி ராமர் கோயிலுக்கு வருமாறு ராமேஸ்வரம் மக்களுக்கு அழைப்பிதழ்
ADDED : ஜன 03, 2024 05:57 AM

ராமேஸ்வரம்: அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்து அருளாசி பெற வேண்டி ராமேஸ்வரம் மக்கள், பக்தர்களுக்கு பா.ஜ., ஹிந்து அமைப்பினர் அழைப்பிதழ் வழங்கி வரவேற்றனர்.
ஜன.22ல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இவ்விழாவில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பங்கேற்க ஆவலாக உள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜன.22ல் வர வேண்டாம். அன்று வீடுகளில் தீபம் ஏற்றி தீபாவளியாக கொண்டாடுங்கள். மறுநாள் முதல் கோயிலுக்கு வாருங்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்து அருளாசி பெற வேண்டி பா.ஜ. மற்றும் ஹிந்து அமைப்பினர் பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தனர். நேற்று ராமேஸ்வரத்தில் வீடு வீடாக சென்று மக்களிடமும், ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த பக்தர்களிடமும் அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றனர்.
இதில் ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக தலைவர் ஆடல் அரசன், பா.ஜ., நிர்வாகிகள் ஸ்ரீதர், ராமு, வி.எச்.பி., நிர்வாகிகள் சரவணன், கார்த்திக், முனீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.