Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சர்வதேச நீர் சறுக்கு விளையாட்டு அகாடமிமத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பு

சர்வதேச நீர் சறுக்கு விளையாட்டு அகாடமிமத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பு

சர்வதேச நீர் சறுக்கு விளையாட்டு அகாடமிமத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பு

சர்வதேச நீர் சறுக்கு விளையாட்டு அகாடமிமத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பு

ADDED : மே 22, 2025 03:04 AM


Google News
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே பிரப்பன் வலசை கடற்கரையில் சர்வதேச தரத்தில் 7 ஏக்கரில்நீர்சறுக்கு விளையாட்டு அகாடமி அமைக்கும் பணி துவங்கியுள்ள நிலையில் கட்டுமானப் பணிக்காக மத்தியகடல் ஆராய்ச்சி மையத்தின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.

ராமநாதபுரத்தில் இருந்து 27 கி.மீ.,ல் சாத்தக்கோன் வலசை ஊராட்சியில் 2 கி.மீ., நீளத்தில் 150 மீட்டர் அகலத்தில் மணற்பாங்கான அரியமான் கடற்கரை அமைந்துள்ளது. கரையோர சவுக்கு மரங்களால் குளிர்ந்த காற்று வீசுகிறது. இக்கடலில் 50 அடி வரை ஆழம் இருக்காது. படகு சவாரியும் உள்ளது.

இதனால் குழந்தைகளுடன் மக்கள் பொழுதுபோக்க வருகின்றனர். ராமநாதபுரம்- -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்ல ஏதுவாக உள்ளது.

இதன் காரணமாக அரியமான் அருகே பிரப்பன் வலசையில் 7 ஏக்கரில் சர்வதேச நீர்சறுக்கு விளையாட்டு அகாடமி அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடற்கரையின் மண்ணின் தன்மை, நீரோட்டத்தின் வேகம் ஆகியவற்றைஆய்வு செய்துள்ளனர்.

இப்பகுதியில் பாய்மரப்படகு, நீர்சறுக்கு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க உகந்த இடமாக நீர்விளையாட்டுவல்லுநர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர்.இதையடுத்து கடந்த பிப்., மாதம் துணை முதல்வர் உதயநிதி பிரப்பன் வலசை கடற்கரையில் நீர் விளையாட்டு அகாடமி அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார்.

2026 ஜன.,க்குள் பிரப்பன் வலசை கடற்கரையில் ரூ.42 கோடியே 90 லட்சத்தில் சர்வதேச தரத்தில் நீர் சறுக்கு விளையாட்டு அகாடமி அமையும் என கூறியுள்ளார்.இதையடுத்து பிரப்பன் வலசையில் நிலத்தை அளவீடு செய்து, மரங்களை அகற்றவனத்துறை அனுமதி பெற்று நிலத்தை சீரமைக்கும்பணிகள் துவங்கியுள்ளன.

எனினும் கட்டுமான பணிகளை துவங்க மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் அனுமதிக்காக விண்ணப்பித்து 2 மாதங்களாக காத்திருக்கின்றனர். அவர்களது அனுமதி கிடத்தவுடன் விரைவில் அலுவலகம், விடுதிகள் அமைக்கும் பணி துவங்க உள்ளது. குறிப்பிட்ட காலத்தில் நீர்சறுக்கு விளையாட்டு மையம் செயல்பாட்டிற்கு வந்துவிடும் எனவிளையாட்டுத்துறை அதிகாரிகள் கூறினர்.---





      Our Apps Available On




      Dinamalar

      Follow us