Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு கலைக் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

அரசு கலைக் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

அரசு கலைக் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

அரசு கலைக் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

ADDED : செப் 20, 2025 11:35 PM


Google News
ராமநாதபுரம்,: ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் இயற்பியல் துறை சார்பில் நானோ வடிவ பொருட்கள், அவற்றின் பயன்பாடு பற்றிய பன்னாட்டு கருத்தரங்கம் இயற்பியலாளர்களின் ஒருங்கிணைப்பு இயக்கமான திருச்சி ராமன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிதி உதவியுடன் நடந்தது.

இக்கருத்தரங்கில் மேற்கு ஆப்ரிக் டி-லோம் பல்கலை பேராசிரியர் மாசபலோ பெனிட்டோ, கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயற்பியல்துறை உதவிப்பேராசிரியர்கள் சிவசுரேந்திரன், சந்திரன், முசிறி அண்ணாதுரை அரசு கலைக்கல்லுாரி இயற்பியல் துறை இணைப்பேராசிரியர், துறை தலைவர் பாலச்சந்திரன், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரி இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் கருணாகரன், ராமநாதபுரம் கவுசானல் கல்லுாரி உதவிப்பேராசிரியர் அருள்ராஜ் ஆகியோர் சமீபகால நானோ இயற்பியல் ஆராய்ச்சிகள் பற்றி விரிவாக பேசினர்.

ஆய்வுக்கட்டுரையில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டன. சென்னை லயோலா கல்லுாரி இயற்பியல் துறை பேராசிரியர் மாதவனுக்கு வாழ்நாள் சாதனையாளர், இயற்பியல் துறைக்கு பங்களிப்பு செய்த மாசபலோ பெனிட்டோவிற்கு சர்வதேச ஆய்வு விருது வழங்கப்பட்டது.

பேராசிரியர்கள் விஜயபிரசாத், சொக்கநாதன் ஆகியோருக்கு சிறந்த ஆராயச்சியாளர் விருது வழங்கப்பட்டது. கருத்தரங்க முதன்மை புரவலர் கல்லுாரி முதல்வர் சீனுவாசகுமரன், பேராசிரியர்கள், ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us