/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சேதுபதி மன்னர் பெயர் வைக்க வலியுறுத்தல் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சேதுபதி மன்னர் பெயர் வைக்க வலியுறுத்தல்
புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சேதுபதி மன்னர் பெயர் வைக்க வலியுறுத்தல்
புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சேதுபதி மன்னர் பெயர் வைக்க வலியுறுத்தல்
புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சேதுபதி மன்னர் பெயர் வைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 23, 2025 11:39 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தென் தமிழர் கட்சியினர் மன்னர் வேடமணிந்து புது பஸ் ஸ்டாண்டிற்கு மன்னர் ரிபெல் முத்துராமலிங்க விஜய ரெகுநாத சேதுபதி பெயரை வைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு ஊர்வலமாக வந்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் ராமநாதபுரத்தில் ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும் புது பஸ் ஸ்டாண்டிற்கு சுதந்திர போராட்ட வீரர் சேதுபதி மன்னர்ரிபெல் முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி பெயர் சூட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தென் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி, நெல்லை பொறுப்பாளர் பாண்டி, பொருளாளர் ராஜேந்திரன், வைகை பாசன விவசாய சங்க மண்டல நிர்வாகி மதுரைவீரன் பங்கேற்றனர்.