/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் சுயே., கவுன்சிலர் வெளிநடப்பு கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் சுயே., கவுன்சிலர் வெளிநடப்பு
கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் சுயே., கவுன்சிலர் வெளிநடப்பு
கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் சுயே., கவுன்சிலர் வெளிநடப்பு
கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் சுயே., கவுன்சிலர் வெளிநடப்பு
ADDED : மே 22, 2025 12:09 AM
கீழக்கரை:இரண்டு கவுன்சில் கூட்டங்களில் கமிஷனர் பங்கேற்காததைக் கண்டித்து கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் வெளி நடப்பு செய்தார்.
கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமை வகித்தார்.
துணை தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். கடந்த இரண்டு நகரசபை கூட்டத்திற்கு கமிஷனர் வராததை கண்டித்து சுயேச்சை கவுன்சிலர் முகமது பாதுஷா வெளிநடப்பு செய்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூ., சூரியகலா: நகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு மீன் மார்க்கெட்டை மாற்ற வேண்டும். கவுன்சிலர்
ஜெயலட்சுமி: எங்கள் வார்டுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராமல் எங்கள் வார்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சேக் உசேன்: நகராட்சி ஊழியர்களுக்கு தொழில் வரிகளை ரத்து செய்யக்கூடாது. முறையாக வசூல் செய்ய வேண்டும். இரண்டு கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் கலந்து கொள்ளாததை வன்மையாக கண்டிக்கிறேன்.
சர்ப்ரைஸ் நவாஸ்: நகராட்சியில் நடக்கக்கூடிய நலத்திட்டங்கள் குறித்து கவுன்சிலர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். ஆயிரம் வீடுகளுக்கு பட்டா வந்தும் அதிகாரிகள் இதுவரை பொதுமக்களிடம் வழங்கவில்லை. அதனை அந்தந்த மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா: கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கைகள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு பணிகள் முடித்து தரப்படும் என்றார்.
சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, மேலாளர் உதயகுமார், இளநிலை உதவியாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.