Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவங்கள் அதிகரிப்பு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவங்கள் அதிகரிப்பு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவங்கள் அதிகரிப்பு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவங்கள் அதிகரிப்பு

ADDED : ஜூன் 23, 2025 07:34 AM


Google News
தொண்டி : தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. நான்கு டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு மாதந்தோறும் சுகப்பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உதாரணமாக கடந்த இரு மாதங்களில் 20க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடந்துள்ளது. இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி கூறியதாவது:

தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவங்கள் நடப்பதால் வீடுகளில் பிரசவம் நடப்பது தடுக்கப்பட்டு, பெண்களுக்கு ஆபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளது. இங்கு பிரசவத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. மாதந்தோறும் சுகப்பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரசவத்திற்கு வரும் தாய்மார்களுக்கு உணவு சானிட்டரி நாப்கின்கள் என இலவச சேவைகள் வழங்கப்படுகின்றன.

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் கர்ப்பணிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. பிரசவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, கர்ப்பிணிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களை அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக டாக்டரை சந்தித்து கூறலாம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us