ADDED : செப் 18, 2025 10:48 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் நுகர்வோர் நலச்சங்கம் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். மேலாண்மைத் துறை தலைவர் மெய்கண்ட கணேஷ் வரவேற்றார்.
ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் முத்துதுரைச்சாமி மாணவர்களுக்கு பதவிபிர மாணம் செய்து வைத்து நுகர்வோர் நலச்சங்கத்தின் பயன்கள் குறித்து விளக்கி னார். ஏற்பாடுகளை பேராசிரியர் ஜெயபாலன் செய்திருந்தார்.