/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சேதுபதி நகரில் காலி இடங்களில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடுசேதுபதி நகரில் காலி இடங்களில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
சேதுபதி நகரில் காலி இடங்களில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
சேதுபதி நகரில் காலி இடங்களில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
சேதுபதி நகரில் காலி இடங்களில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
ADDED : ஜன 01, 2024 05:09 AM

ராமநாதபுரம்: பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதி நகரில் குடியிருப்புகள், அலுவலகங்கள் உள்ள பகுதியில் காலி இடங்களில் மழை நீருடன்கழிவு நீரும் தேங்கியுள்ளதால் கொசுத்தொல்லை, சுகாதாரக்கேட்டால்மக்கள் சிரமப்படுகின்றனர்.
பட்டணம்காத்தான் ஊராட்சியில் போதிய வடிகால் வசதியின்றிசேதுபதிநகர், பாரதிநகர், ஓம்சக்தி நகர், கலெக்டர் அலுவலகவளாகத்தில் குளம் போல தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது.
டி-பிளாக்கில் மாணவர் விடுதிஅருகே காலி இடத்தில் கழிவுநீரில் மழை நீரும் கலந்து தற்போதுகுளம் போல தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
அப்பகுதியில்குடியிருக்கும் மக்கள் கொசுத்தொல்லையால் சிரமப்படுகின்றனர். எனவேதேங்கியுள்ள தண்ணீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிடவேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.