/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குடிநீர் வரல, குப்பை அள்ளவில்லையா தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம் குடிநீர் வரல, குப்பை அள்ளவில்லையா தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்
குடிநீர் வரல, குப்பை அள்ளவில்லையா தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்
குடிநீர் வரல, குப்பை அள்ளவில்லையா தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்
குடிநீர் வரல, குப்பை அள்ளவில்லையா தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்
ADDED : மார் 25, 2025 05:30 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளான தெரு விளக்கு, குடிநீர் மற்றும் குப்பை தொடர்பானபுகார்களை 1800 425 7040 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், போகலுார் - - 74029 07610, கடலாடி -- 74029 07614, கமுதி -- 74029 07613, மண்டபம் -- 74029 07606, முதுகுளத்துார் -- 74029 07612, நயினார்கோவில் -- 74029 07611, பரமக்குடி -- 74029 07609, ஆர்.எஸ்.மங்கலம் -- 74029 07607, ராமநாதபுரம் -- 74029 07604, திருப்புல்லாணி -- 74029 07605, திருவாடாணை -74029 07608 ஆகிய அலைபேசி எண்ணில் 'வாட்ஸ்ஆப்'ல் மக்கள் தங்களது ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அடிப்படை தேவைகள் தொடர்பான புகார்களைதெரிவிக்கலாம்.
மார்ச் 31 க்குள் குடிநீர், சொத்துவரி, தொழில்வரி ஆகிய வரிகளை நேரடியாக அல்லது https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்திலும் வரியை செலுத்தலாம்.
குறிப்பிட்ட காலத்தில் செலுத்த தவறினால் ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.