Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மலேசியாவில் கணவருக்கு சித்திரவதை; அரசு மீட்டுத்தர மனைவி வலியுறுத்தல்

மலேசியாவில் கணவருக்கு சித்திரவதை; அரசு மீட்டுத்தர மனைவி வலியுறுத்தல்

மலேசியாவில் கணவருக்கு சித்திரவதை; அரசு மீட்டுத்தர மனைவி வலியுறுத்தல்

மலேசியாவில் கணவருக்கு சித்திரவதை; அரசு மீட்டுத்தர மனைவி வலியுறுத்தல்

ADDED : செப் 02, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்; மலேசியாவில் பணி புரியும் இடத்தில் ராமநாத புரம் மாவட்டம் வண்ணான்குண்டு கிராமத்தை சேர்ந்த தொழிலாளியைஅடைத்து வைத்து சித்திரவதை செய்வதால் மத்திய, மாநில அரசுகள் அவரை உயிருடன் பத்திரமாக மீட்டுத்தர வேண்டும் என அவரது மனைவி பவித்ரா வலியுறுத்தினார்.

வண்ணான்குண்டு கிராமம் ராஜவேலியைச் சேர்ந்தவர் பிரசாந்த் 28. இவர் மலேசியாவில் உள்ள ஓட்டலில் 2023 முதல் சமையல் வேலை செய்கிறார்.

இந்நிலையில் ஓட்டல் பணத்தை கையாடல் செய்து விட்டதாக கூறி பணத்தை தரக்கோரி அவரை அடைத்து வைத்து அடித்து துன்புறுத்துகின்றனர்.அவரை உயிருடன் மீட்டு இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என பிரசாந்த் மனைவி பவித்ரா மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பிரசாந்த் மனைவி பவித்ரா கூறுகையில், எனக்கு திருமணமாகி ஒரு ஆண்குழந்தை உள்ளது. எனது கணவர் பிரசாந்த் மலேசியாவில் ேஷக் என்பவரின் ஓட்டலில் 2023 முதல் வேலை பார்த்து 2 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.50 ஆயிரம் அனுப்பினார்.

இந்நிலையில் ஓட்டல் உரிமையாளர் ேஷக் அலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு உனது கணவர் ஓட்டலில் ரூ.15 லட்சம் கையாடல் செய்து விட்டார்.

பணத்தை கொடுத்தால் தான் கணவரை உயிருடன் விட முடியும். இல்லை என்றால் கொன்று விடுதாக கூறி மிரட்டி என்னையும் தரக்குறைவாக பேசினார்.

எனது கணவரை உயிருடன் பத்திரமாக மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us