/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகள் மும்முரம்: சீமைக் கருவேல மரங்கள் அகற்றம் நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகள் மும்முரம்: சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்
நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகள் மும்முரம்: சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்
நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகள் மும்முரம்: சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்
நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகள் மும்முரம்: சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்
ADDED : மே 29, 2025 11:13 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலைகளில் மழையால் சேதமடைந்த இடங்களை கண்டறிந்து சீரமைக்கப்படுகிறது. சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்துள்ள மரங்களை அகற்றும் பணி நடக்கிறது.
ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டம் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் மாநிலச்சாலை 250 கி.மீ., மாவட்டச்சாலை 380 கி.மீ., கிராமச்சாலை 1130 என 1760 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்படுகிறது. கடந்த வடகிழக்கு பருவமழை மற்றும் தற்போது பெய்து வரும் கோடை கால மழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை சேதமடைந்தும், தரைப்பாலம் துாம்புகள் மண் மேவியும், இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முருகன் மேற்பார்வையில் ராமேஸ்வரம் சாலை, மதுரைச்சாலை, கமுதி, முதுகுளத்துார், பார்த்திபனுார் உள்ளிட்ட நகர், புறநகர் கிராமங்களில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது.
சீமைக்கருவேல மரங்களை மண் அள்ளும் இயந்திரம் உதவியுடன் முழுமையாக அகற்றும் பணிகள் நடக்கிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளது குறித்து புகார் அளித்தால் உடனடியாக அங்கு பேட்ஜ் ஓர்க் செய்து தரப்படுகிறது. ராமநாதபுரம் துவங்கி காவனுார், பாண்டியூர் வரை இருவழிசாலையை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாண்டியூர் முதல் நயினார்கோவில் வரை 4 வழிச்சாலையாக மாற்ற திட்ட மதிப்பீடு தயராகி வருகிறது. இதுபோன்று ஒருவழிச்சாலையாக உள்ள திருப்புல்லாணி டூ பிரப்பன்வலசை 4 கி.மீ., சாலையை இருவழிசாலையாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.