/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அதிக கட்டணம் வசூல் *தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு.. *வேளாண் பொறியியல் துறைக்கு கோரிக்கை அதிக கட்டணம் வசூல் *தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு.. *வேளாண் பொறியியல் துறைக்கு கோரிக்கை
அதிக கட்டணம் வசூல் *தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு.. *வேளாண் பொறியியல் துறைக்கு கோரிக்கை
அதிக கட்டணம் வசூல் *தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு.. *வேளாண் பொறியியல் துறைக்கு கோரிக்கை
அதிக கட்டணம் வசூல் *தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு.. *வேளாண் பொறியியல் துறைக்கு கோரிக்கை
ADDED : ஜன 03, 2024 05:54 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நெல் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தனியார் அறுவடை இயந்திரங்களுக்கு மணிக்கு ரூ.3500க்கும் மேல் அதிக கட்டணம் வசூலிப்பதால் அரசு சார்பில் வேளாண் பொறியியல் துறையினர் நெல் அறுவடை இயந்திரங்களை வழங்க விவசாயிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை நம்பி 1 லட்சத்து 28 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பல இடங்களில் அறுவடைக்கு தயாராகி வருகிறது. திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு 26,650 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அறுவடைக்கு தயாரான நிலையில் பருவம மழை அதிகரிப்பால் மழைநீரில் சேற்றில் சாய்ந்துள்ள நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல மாவடங்களில் இருந்து ஏராளமான அறுவடை இயந்திரங்கள் வந்துள்ளன.
ஒரு மணி நேரத்திற்கு ரூ.3500 வரை வாடகை வசூல் செய்வதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை போக்க அரசு சார்பில் நெல் அறுவடை இயந்திரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரே ஒரு இயந்திரம் மட்டும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் நிறுத்தப்பட்டுள்ளது. சாதாரண இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1150, பெல்ட் இயந்திரத்திற்கு ரூ.1650 வசூல் செய்யப்படுகிறது.
விவசாயிகள் வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டோ, அல்லது உழவன் செயலி ஆப் மூலம் விண்ணப்பித்து தங்களது நிலங்களில் நெல் அறுவடை பணியை மேற்கொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குறைந்தது 8 இயந்திரங்கள் வழங்க வேண்டும் என்று வேளாண் பொறியியல் துறை தலைமை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.
இரு வாரங்களுக்குள் இயந்திரங்கள் வந்துவிடும். தனியார் இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றனர்.
---