/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் ஒரு மணி நேரம் கொட்டிய கனமழை பரமக்குடியில் ஒரு மணி நேரம் கொட்டிய கனமழை
பரமக்குடியில் ஒரு மணி நேரம் கொட்டிய கனமழை
பரமக்குடியில் ஒரு மணி நேரம் கொட்டிய கனமழை
பரமக்குடியில் ஒரு மணி நேரம் கொட்டிய கனமழை
ADDED : மே 10, 2025 07:12 AM
பரமக்குடி: பரமக்குடி பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரம் கொட்டிய கனமழையால் ரோடுகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மே 4ல் அக்னி நட்சத்திரம் துவங்கியது. வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் மக்கள் அனலில் அவதி அடைந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு துவங்கி ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. மேலும் பலத்த காற்றும் வீசியது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனை அடுத்து ஒரு மணி நேரம் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது.
நகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.