உத்தரகோசமங்கை, : உத்தரகோசமங்கை அருகே எக்ககுடி சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது.
நேற்று குருபூஜை விழாவில் சிவ சகஸ்ரநாம அர்ச்சனை, லட்சார்ச்சனை மற்றும் மாலை விளக்கு பூஜை நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம், பூர்ணகுதி அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.
காலை 9:00 மணிக்கு மூலவர் சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமி மற்றும் சிவலிங்கத்திற்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனைகள் நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.