ADDED : மார் 18, 2025 06:53 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி 28வது பட்டமளிப்பு விழா நடந்தது.
முதல்வர் மணிமாலா வரவேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலை கல்லுாரி வளர்ச்சி குழுமத்தின் முதன்மையர் (பொறுப்பு) சிவக்குமார் பங்கேற்று 460 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். 32 மாணவிகள் பல்கலை தரவரிசை பட்டியலில் இடம்பெற்றனர். இதில் 6 பேர் பட்டியலில் முதலிடம் பெற்றனர். ஏற்பாடுகளை முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.