ADDED : மார் 28, 2025 05:57 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அமிர்தா பள்ளியில் கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. இப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 'பால புரஸ்கார் திவாஸ்' தினம் திட்டத்தில் பாலர் பள்ளியில் படிக்கும் கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமியம்மா, ராமேஸ்வரம் டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி, சமூக ஆர்வலர் விஜயகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.
முதல்வர் இந்திரா தேவி, ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.