அரசு ஊழியர் சங்க அமைப்பு தின விழா
அரசு ஊழியர் சங்க அமைப்பு தின விழா
அரசு ஊழியர் சங்க அமைப்பு தின விழா
ADDED : மே 10, 2025 07:03 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி அரசு ஊழியர் சங்க அலுவலகம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் முன்பு கொடியேற்றப்பட்டது. இனிப்புகள் வழங்கப்பட்டது.
மாவட்டத்தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நஜ்முதீன், மாவட்ட துணைத் தலைவர்கள் பாலுசாமி, வேலுசாமி, இணைச்செயலாளர்கள் முத்துச்சாமி, ரோஸநாராபேகம், சரத்மோகன், கருவூலத்துறை மாவட்ட செயலாளர் ஜெனீஸ்டர், சமூக நலத்துறை பணியாளர்கள் சங்கத்தினர், கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர், ராமநாதபுரம் நகர், கலெக்டர் அலுவலக வட்டக்கிளை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.