ADDED : ஜன 30, 2024 11:55 PM
பரமக்குடி : காந்தியின் நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள காந்தி சிலைக்கு தமிழ்நாடு காங்., நெசவாளர் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நெசவாளர் அணி மாநில செயலாளர் கோதண்டராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். தொழிற்சங்க செயலாளர் குப்புசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.