ADDED : ஜூலை 21, 2024 04:31 AM
தொண்டி: ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் திலகவதி, உதவி செயற்பொறியாளர்கள் திருவாடானை சித்தி விநாயகமூர்த்தி, தொண்டி பாலமுருகன் மற்றும் 10 பொறியாளர்கள், முன்னாள் ராணுவ மின் திருட்டு தடுப்பு படையினர் தொண்டி துணை மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 649 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டதில் நான்கு மின் இணைப்புகளில் மின் பயன்பாட்டில் விதிமீறல்கள், மின் திருட்டு கண்டறியப்பட்டது.
இதனால் நான்கு பேருக்கும் ரூ.61 ஆயிரத்து 294 அபராதம் விதிக்கப்பட்டது.