Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஜி.எஸ்.டி., வரியால் 8 ஆண்டுகளாக மக்களை கசக்கி பிழிந்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்  பேட்டி

ஜி.எஸ்.டி., வரியால் 8 ஆண்டுகளாக மக்களை கசக்கி பிழிந்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்  பேட்டி

ஜி.எஸ்.டி., வரியால் 8 ஆண்டுகளாக மக்களை கசக்கி பிழிந்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்  பேட்டி

ஜி.எஸ்.டி., வரியால் 8 ஆண்டுகளாக மக்களை கசக்கி பிழிந்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்  பேட்டி

ADDED : செப் 14, 2025 03:46 AM


Google News
ராமநாதபுரம்:ஜி.எஸ்.டி., வரி திருத்தம் செய்யாமல் 8 ஆண்டுகளாக மக்களை கசக்கி பிழிந்ததற்கு மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி மணிப்பூருக்கு இரண்டாண்டுகளுக்கு முன் சென்றிருக்க வேண்டும். அங்குள்ள இரு பிரிவினரை ஒற்றுமைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நேரத்தில் இடம் பெயர்ந்த மக்களை பார்க்க பிரதமர் சென்றுள்ளார்.

இவ்வளவு நாட்கள் கழித்து சென்றதில் மகிழ்ச்சி. இவ்வளவு நாட்கள் செல்லவில்லை என்பதில் ஆழ்ந்த வருத்தம்.

ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் வேண்டும் என 8 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.

அப்போது மாற்றம் செய்யாமல் தற்போது தான் மக்கள் வரிச்சுமையில் இருப்பதாக கண்டுபிடித்தனரா. பார்லிமென்டில் 2016 ஆக.,ல் ஜி.எஸ்.டி., அரசியல் திருத்த சட்டம் கொண்டு வந்த போது இவ்வளவு அதிகமான வரி விகிதம் இருப்பது தவறு என சுட்டி காட்டினோம்.

3 மாதங்களுக்கு முன்பு கூட ஜி.எஸ்.டி., வரி விகிதம் சரி என கூறி வந்தவர்கள் தற்போது திடீரென அறிவு தெளிந்தது போல் ஜி.எஸ்.டி., வரி விகிதத்தில் திருத்தம் செய்துள்ளனர். எட்டு ஆண்டுகள் கழித்து அறிவு தெளிந்ததற்காக நன்றி. ஆனால் எட்டு ஆண்டுகளாக கசக்கி பிழிந்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இன்றைக்கு பென்சில், நோட்புக் எல்லாம் 5 சதவீதம் என்றாலும், எட்டு ஆண்டுகளாக அத்தியாவசியப் பொருட்களுக்கு 12 முதல் 18 சதவீதம் வரி செலுத்தியுள்ளோம். இந்த மாற்றத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சுங்கவரி, மக்களின் கடன் சுமை கூடியது, பொருளாதார சுணக்கம், மக்களிடையே சேமிப்பு குறைந்தது ஆகியவை காரணமாக இருக்கலாம்.

மக்களின் வருமானம், வேலைவாய்ப்பு, விலைவாசி உள்ளிட்டவை கூடியதா, குறைந்ததா என நிதி அமைச்சர் சொல்லாமல் ஜி.டி.பி., உயர்ந்துள்ளதாக கூறியது ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us