/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வனத்துறை பணியாளருக்கு அரிவாள் வெட்டு; கைது 2 வனத்துறை பணியாளருக்கு அரிவாள் வெட்டு; கைது 2
வனத்துறை பணியாளருக்கு அரிவாள் வெட்டு; கைது 2
வனத்துறை பணியாளருக்கு அரிவாள் வெட்டு; கைது 2
வனத்துறை பணியாளருக்கு அரிவாள் வெட்டு; கைது 2
ADDED : ஜூன் 18, 2025 11:34 PM
சாயல்குடி: சாயல்குடியில் நேற்று வனத்துறை பணியாளருக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது.
சாயல்குடி மாதவன் நகரை சேர்ந்தவர் பச்சம்மால் 45. மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையில் திட்டப் பணியாளராக உள்ளார். இவரது உறவினரான ஒப்பிலானை சேர்ந்த ஹரிநாத் 20, மற்றும் பெரியகுளத்தை சேர்ந்த நாகநாத சேதுபதி 27, ஆகியோருடன் பச்சம்மாலுக்கு முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை 11:00 மணிக்கு மாதவன் நகரில் வீட்டில் இருந்த பச்சம்மாலை ஹரிநாத், நாகநாத சேதுபதி இருவரும் சேர்ந்து தாக்கி அரிவாளால் இடது கையில் வெட்டி காயம் ஏற்படுத்தினர். சாயல்குடி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.