/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் அருகே வனத்துறை படகு தளம்.. பராமரிப்பில்லை; சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது ராமேஸ்வரம் அருகே வனத்துறை படகு தளம்.. பராமரிப்பில்லை; சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது
ராமேஸ்வரம் அருகே வனத்துறை படகு தளம்.. பராமரிப்பில்லை; சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது
ராமேஸ்வரம் அருகே வனத்துறை படகு தளம்.. பராமரிப்பில்லை; சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது
ராமேஸ்வரம் அருகே வனத்துறை படகு தளம்.. பராமரிப்பில்லை; சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது
ADDED : மார் 26, 2025 05:33 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா படகு தளம் பராமரிப்பின்றி உருகுலைந்துள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் வருகையின்றி படகு சவாரி கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநிலங்களில் இருந்து வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு பொழுது போக்கும் வகையில் மண்டபம் தோணித்துறை கடற்கரையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ரூ.40 லட்சத்தில் சுற்றுலா படகு தளம் அமைத்தனர்.
இங்கிருந்து சுற்றுலாப் படகில் பாம்பன் ரயில் பாலம், தேசிய நெடுஞ்சாலை பாலம், கடலில் பவளப்பாறைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 300 வசூலிக்கப்படுகிறது. மேலும் இங்கு கார் பார்க்கிங் வசதியும், கடல் அழகை கண்டு ரசிக்க கடற்கரையில் நிழல் பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.
துவக்கத்தில் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதற்கு வந்த நிலையில் காலப்போக்கில் வருகை குறைந்தது. கடந்த ஆண்டு மன்னார் வளைகுடா கடலில் வீசிய சூறாவளியால் படகு தளத்தில் கடற்கரையில் இருந்த கூரை பந்தல் விழுந்து சேதமடைந்தது.
இதனை இன்று வரை சரி செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்பதற்கு நிழல் கூட இன்றி சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இங்கு கழிப்பறை பராமரிப்பின்றி சுகாதாரக் கேடாக உள்ளது.
இதனால் வனத்துறையின் சுற்றுலா படகு தளம் களையிழந்ததால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்தது. இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.40 லட்சம் வீணாகிப் போகும் அபாயம் உள்ளது.
--