பிளாஸ்டிக் தாளில் உணவு பார்சல்கள்
பிளாஸ்டிக் தாளில் உணவு பார்சல்கள்
பிளாஸ்டிக் தாளில் உணவு பார்சல்கள்
ADDED : மார் 25, 2025 05:39 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதி ஹோட்டல்களில் வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்பாடு அதிகரித்துள்ளது.
சூடாக உள்ள உணவுப் பொருட்கள் வாழை இலையில் சாப்பிடும் போது அதில் உள்ள பச்சயம் காரணமாக உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம், உப்பூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி ஹோட்டல்களில், வாடிக்கையாளர்களுக்கு வாழை இலையை தவிர்த்து பிளாஸ்டிக் பேப்பரில் உணவு பரிமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மாலை மற்றும் இரவு நேர பரோட்டோ ஸ்டால்கள், டிபன் சென்டர்களில் முற்றிலுமாக பார்சலுக்கு வாழை இலை தவிர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பேப்பரில் சூடான உணவுப் பொருட்கள் பார்சல் செய்து கொடுக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பேப்பரில் சூடான உணவை பார்சல் செய்வதால் அதை உண்ணும் குழந்தைகளும், வயதானவர்களும், பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
புகார் எழும் நேரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பெயரளவில் மட்டுமே சோதனை செய்துவிட்டு பின் கண்டு கொள்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.