/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அனுமதியின்றி சிலிண்டர் விற்பனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அனுமதியின்றி சிலிண்டர் விற்பனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
அனுமதியின்றி சிலிண்டர் விற்பனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
அனுமதியின்றி சிலிண்டர் விற்பனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
அனுமதியின்றி சிலிண்டர் விற்பனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
ADDED : செப் 04, 2025 04:16 AM

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவிலில் அனுமதியின்றி சிலிண்டர்கள் விற்பனை செய்த நிலையில் பறக்கும் படை தாசில்தார் பறிமுதல் செய்தார்.
பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்தில் காரடர்ந்தகுடி கிராமம் உள்ளது. இங்குள்ள கடையில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் அனுமதியின்றி விற்பதாக தகவல் வந்தது.
தினேஷ் குமார் என் பவரது கடையில் பறக்கும் படை தாசில்தார் தமீம்ராஜா, ஆர்.ஐ., பாலசுப்பிர மணியன் ஆய்வு செய்த னர். அப்போது எவ்வித பாதுகாப்பும், அனுமதியும் இன்றி 14 வீட்டு உபயோக சிலிண்டர்கள் வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து கோட வுனில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் டி.ஆர்.ஓ., விடம் அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை அடிப்படையில் அப ராதம் அல்லது மேல் நட வடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.