/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நெல் அறுவடை இயந்திரங்களுக்கு குறைந்தபட்ச வாடகை நிர்ணயம்நெல் அறுவடை இயந்திரங்களுக்கு குறைந்தபட்ச வாடகை நிர்ணயம்
நெல் அறுவடை இயந்திரங்களுக்கு குறைந்தபட்ச வாடகை நிர்ணயம்
நெல் அறுவடை இயந்திரங்களுக்கு குறைந்தபட்ச வாடகை நிர்ணயம்
நெல் அறுவடை இயந்திரங்களுக்கு குறைந்தபட்ச வாடகை நிர்ணயம்
ADDED : ஜன 05, 2024 05:36 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு குறைந்தபட்ச வாடகையாக சக்கர வகை இயந்திரங்களுக்கு மணிக்கு ரூ.1500ம், டிராக்கிற்கு ரூ.2300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம், திருவாடாடனை உள்ளிட்ட பல இடங்களில் தற்போது நெல் அறுவடை துவங்கியுள்ளது. தனியார் அறுவடை இயந்திரத்திற்கு மணிக்கு ரூ.3500 வரை வசூல் செய்கின்றனர். கூடுதல் செலவால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் பேனர் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நெல் அறுவடை பணிக்கு பயன்படுத்தப்படும் தனியார் சக்கரவகை அறுவடை இயந்திரத்திற்கு மணிக்கு ரூ.1500, டிராக்கிற்கு மணிக்கு ரூ.2300 என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் குறைந்தபட்ச வாடகை மட்டும் செலுத்தி பயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.