/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்தில் ஜூன் 15ல் மீன்பிடிப்பதற்கு அனுமதி புதிய வலைகள் வடிவமைப்பு தீவிரம் ராமேஸ்வரத்தில் ஜூன் 15ல் மீன்பிடிப்பதற்கு அனுமதி புதிய வலைகள் வடிவமைப்பு தீவிரம்
ராமேஸ்வரத்தில் ஜூன் 15ல் மீன்பிடிப்பதற்கு அனுமதி புதிய வலைகள் வடிவமைப்பு தீவிரம்
ராமேஸ்வரத்தில் ஜூன் 15ல் மீன்பிடிப்பதற்கு அனுமதி புதிய வலைகள் வடிவமைப்பு தீவிரம்
ராமேஸ்வரத்தில் ஜூன் 15ல் மீன்பிடிப்பதற்கு அனுமதி புதிய வலைகள் வடிவமைப்பு தீவிரம்
ADDED : ஜூன் 13, 2025 02:31 AM

ராமேஸ்வரம்:தடைக்காலம் முடிந்து ஜூன் 15ல் மீன்பிடிக்க மீன்துறை உத்தரவிட்டதால் ராமேஸ்வரத்தில் புதிய வலைகள் வடிவமைப்பில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மீன்கள் இனப்பெருக்க காலமாக ஏப்.,15 முதல் ஜூன் 14 இரவு 12:00 மணி வரை விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது. இத்தடை காலம் முடிய இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் தடையை மீறி ஜூன் 14ல் மீன் பிடிக்க செல்லக் கூடாது.
மீனவர்கள் அனுமதி டோக்கன் பெற்று ஜூன் 15ல் மீன்பிடிக்க செல்ல வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேஸ்வரம் மீன்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் படகுகளில் பழுது நீக்கம் செய்து புதிய வர்ணம் பூசப்பட்டுள்ளது. 60 நாள்கள் தடைக்கு பின் அதிக இறால் மீன்கள் கிடைக்கும் ஆவலில் புதிய மீன்பிடி வலைகள் வடிவமைப்பில் மீனவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு படகில் இரு வலைகள் வீதம் 1400 புதிய வலைகள் வடிவமைக்கின்றனர். ஒரு வலைக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு ஆகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.