பெட்ரோல் பங்க் அருகில் தீ விபத்து
பெட்ரோல் பங்க் அருகில் தீ விபத்து
பெட்ரோல் பங்க் அருகில் தீ விபத்து
ADDED : ஜூன் 08, 2025 11:12 PM

திருவாடானை: திருவாடானை-அஞ்சுகோட்டை ரோட்டில் எல்.கே.நகர் அருகே பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள காலி இடத்தில் குப்பை குவிந்து கிடந்தது.
நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு யாரோ சிலர் தீ வைத்ததால் குப்பை எரிய துவங்கியது.
பலத்த காற்று வீசியதால் பெட்ரோல் பங்க் அருகில் இருந்ததால் விபத்து அபாயம் ஏற்பட்டது.
திருவாடானை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முருகானந்தம், வீரர்கள் சென்று தீயை அணைத்ததால் விபத்து தவிர்க்கபட்டது.