Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கண்மாய்களில்  அதிகளவு மண் அள்ளுவதை தடுங்க கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கண்மாய்களில்  அதிகளவு மண் அள்ளுவதை தடுங்க கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கண்மாய்களில்  அதிகளவு மண் அள்ளுவதை தடுங்க கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கண்மாய்களில்  அதிகளவு மண் அள்ளுவதை தடுங்க கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

ADDED : செப் 20, 2025 03:52 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் முகாமில் கண்மாய்களில் அதிக மண் எடுப்பதை தடுக்கவும், நீர்பிடிப்பு பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு, வேளாண் இணை இயக்குநர் பாஸ்கரமணியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:

நம்பிராஜன், நல்லிருக்கை: உத்தரகோசமங்கையில் தேசிய வங்கி வேண்டும். அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் உழவர்சந்தை அல்லது வாரச்சந்தை அமைக்க வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர்: உத்தரசோசமங்கை கோயிலுக்கு சுற்றுலாபயணிகள் வருவதால் வங்கி, கூடுதல் ஏ.டி.எம்., வசதி செய்து தரவும், வாரச்சந்தை நடத்த ஊராட்சி ஒன்றியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மயில் வாகனன், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: மாவட்டத்தில் கண்மாய்களில் எவ்வளவு மண் எடுக்க வேண்டும். பல இடங்களில் நிறைய தவறு நடக்கிறது.

அதிக மண் அள்ளுவதை தடுக்க வேண்டும். 2024 டிச.,2025 ஜன., மழை நிவாரணம் எப்போது கிடைக்கும்.

கலெக்டர்: கண்மாய்களில் மண் அள்ளுவதை கண்காணிக்கிறோம். நிர்ணயம் செய்த அளவை விட மண் அள்ளினால் நடவடிக்கை எடுக்கப்படும். மழை நிவாரணம் அரசிடம் கேட்டுள்ளோம். விரைவில் வழங்கப்படும்.

மைக்கேல், பொன்னக்கனேரி, முதுகுளத்துார்: கண்மாய், வாய்க்கால் துார்வாரும் பணியை நுாறு நாள் பணியாளர்கள் மூலம் செய்ய வேண்டும். சீமைக் கருவேல மரங்களை அகற்ற பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை.

மலைச்சாமி, ஒருங்கிணைப்பாளர், ைஹட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பு குழு: 20 இடங்களில் ைஹட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அரசு கைவிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் நிலக்கரி எடுக்க பல இடங்களில் ஆய்வு நடக்கிறது. ராமநாதபுரத்தை பாலை வனமாக்கும் திட்டங்களை செயல்படுத்தக் கூடாது.

கலெக்டர்: ைஹட்ரோ கார்பன், நிலக்கரி போன்றவை எடுப்பதற்கு எந்தவிதமான உரிமம், அனுமதி வழங்கவில்லை. நீங்கள் சொல்வது மத்திய அரசின் புவியியல் துறை சார்பில் கடலோர பகுதிகளில் நடைபெறும் மண், பாறை, நீரின் இருப்பு விபரம் குறித்து ஆய்வுதான்.

கலெக்டருக்கு நன்றி: முன்னதாக மாலங்குடி, நல்லிருக்கை உள்ளிட்ட இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய்கள், வாய்க்கால்கள் துார்வார உத்தரவிட்டது. நெல் கோடவுன் அமைக்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள் கோரிக்கையை ஏற்று முதுகுளத்துாரில் பொன்னக்கனேரியில் பஸ் விட நடவடிக்கை எடுத்த கலெக்டரை பாராட்டி அந்த ஊரின் விவசாயிகள் கலெக்டருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாசுகி, கூட்டுறவு, வேளாண்துறை, வனத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங் கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us