/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் சப்கலெக்டர் அலுவலகம் முற்றுகை இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் சப்கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் சப்கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் சப்கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் சப்கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ADDED : மே 20, 2025 11:33 PM
பரமக்குடி: -பரமக்குடி அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை ஒழிப்பதுடன், பயிர் சேதங்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பரமக்குடி அருகே நெல், பருத்தி, மிளகாய், கரும்பு, கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்கின்றனர்.
இப்பகுதியில் காட்டுப்பன்றிகள், மானகள் பயிர்களை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது.
காட்டு பன்றிகளை ஒழிக்க தமிழக அரசு வனத்துறை மூலம் 2025 ஜன., 9ம் தேதி அரசாணை வெளியிட்டது. ஆனால் இந்த ஆணையால் எந்த பயனும் இல்லை.
நுாற்று-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அர்ஜுனன் தலைமையில் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாவட்ட செயலாளர் மலைச்சாமி முன்னிலை வகித்தார்.
அப்போது சப் கலெக்டர் அபிலாஷா கவுர் மாற்று பணிக்கு சென்ற நிலையில் பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையில், சப் கலெக்டர் நேர்முக உதவியாளர் ரெங்கராஜன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
பரமக்குடி சரக வன அலுவலர் (பொ) ராஜசேகரன் விவசாயிகளிடம் கூறியபோது: காட்டுப்பன்றிகளை சுடுவதற்கான ஆயத்த பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட வனத்துறையினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயிர் சேதம் அடைந்த விவசாயிகள் வி.ஏ.ஓ., ஆர்.ஐ., உள்ளிட்டவரின் சான்றுகளுடன் வனத்துறையில் விண்ணப்பிக்கலாம். ஒட்டுமொத்தமாக ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
151 விவசாயிகள் தங்களுடைய பயிர் சேதம் குறித்து மனுக்களை வழங்கினர்.