ADDED : செப் 11, 2025 10:41 PM
உத்தரகோசமங்கை; கீழக்கரை தாலுகா அளவிலான விவசாயிகள் சங்க கிளை கூட்டம் உத்தரகோசமங்கையில் நடந்தது. பாலு தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
தாலுகா செயலாளர் முருகேசன் வரவேற்றார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் போஸ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
செப்.,30ல் கலெக்டர் அலுவலகம் முன் நிலமிருந்தும் பட்டா இல்லாத நிலையை சுட்டிக் காட்டி விவசாயிகள் நிலம் மீட்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.