/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரத்திற்கு திறக்கப்பட்ட வைகை நீரால் ஆற்றுப்படுகை தான் நனையும் விவசாயிகள் வேதனை ராமநாதபுரத்திற்கு திறக்கப்பட்ட வைகை நீரால் ஆற்றுப்படுகை தான் நனையும் விவசாயிகள் வேதனை
ராமநாதபுரத்திற்கு திறக்கப்பட்ட வைகை நீரால் ஆற்றுப்படுகை தான் நனையும் விவசாயிகள் வேதனை
ராமநாதபுரத்திற்கு திறக்கப்பட்ட வைகை நீரால் ஆற்றுப்படுகை தான் நனையும் விவசாயிகள் வேதனை
ராமநாதபுரத்திற்கு திறக்கப்பட்ட வைகை நீரால் ஆற்றுப்படுகை தான் நனையும் விவசாயிகள் வேதனை
ADDED : ஜூன் 30, 2025 04:16 AM
ராமநாதபுரம் : வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறக்கப்பட்ட நீரால் ஆற்றுப்படுகை தான் நனையும். பயிர் சாகுபடிக்கு பயன்படாது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வைகை அணையிலிருந்து வைகை பாசனப்பகுதியில் கடைமடைப்பகுதியான ராமநாதபுரத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1251 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது. ஜூன் 25 ல் வினாடிக்கு 3000 கனஅடிநீர் மூன்றாம், நான்காம் நாளில் 2000 கன அடியாக குறைக்கப்படும். 5, 6ம் நாட்களில் வினாடிக்கு 1500 கன அடியும், 7 ம் நாளில் 1479 கன அடியாக குறைக்கப்பட்டு நிறுத்தம் செய்யப்படவுள்ளது. தற்போது திறக்கப்பட்ட தண்ணீர் வைகை ஆற்றுப்படுகை நனைப்பதற்கு மட்டுமே பயன் பெறும். ஜூன் 25 ல் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று வரை ராமநாதபுரம் வந்து சேரவில்லை.
இதுகுறித்து வைகை பூர்விக பாசன விவசாயிகள் சங்க பொது செயலாளர் ஆதிமூலம் தெரிவித்ததாவது: வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட 1251 மில்லியன் கன அடி நீர் ஆற்றுப்படுகையை நனைப்பதற்கு மட்டுமே பயன்பெறும். நிலத்தடி நீர் பெருகி ஆற்றுப்படுககையில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வைகை பூர்விக பாசன பகுதிகள் பயன்பெற முல்லை பெரியாறு அணையில் உள்ள ரூல்கர்வ் முறையை ரத்து செய்ய வேண்டும். அங்கு நீர் மட்டத்தினை 152 அடியாக உயர்த்தினால் மட்டுமே வைகை பூர்விக பாசன பகுதியில் உள்ள 374 கண்மாய்கள், ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும்.
கேரள அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பேபி அணை பலப்படுத்துவதற்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும். பேபி அணையை பலப்படுத்திய பின்பு முல்லை பெரியாறு அணையில் 152 அடியாக நீர் மட்டத்தினை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை செய்தால் மட்டுமே வைகை பூர்விக பாசன பகுதிகள் முழுமையாக பாசன வசதி பெறும். தற்போது வரை 50 சதவீத வைகை பாசன பகுதிகள் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்ய முடியாத நிலையில் வறண்டு தான் உள்ளது, என்றார்.