ADDED : செப் 04, 2025 04:04 AM
ராமநாதபுரம்: பிரப்பன்வலசை பாம்பன் சுவாமிகள் கோயில் டிரஸ்ட், ராம்நாடு ராயல்ஸ் ரோட்டரி சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் பாம்பனில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. 15 பேர் அறுவை சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
ரோட்டரி சங்க தலைவர் விக்னேஷ், செயலர் நாசர், பாம்பன் சுவாமிகள் டிரஸ்ட் நிர்வாகி நாக ராஜன், கடல் ஓசை எப்.எம்., நாகநாதன், குமரகுரு ஆகியோர் பங்கேற்றனர்.