/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வேலை வாய்ப்பு குறித்த கண்காட்சி கருத்தரங்கம்வேலை வாய்ப்பு குறித்த கண்காட்சி கருத்தரங்கம்
வேலை வாய்ப்பு குறித்த கண்காட்சி கருத்தரங்கம்
வேலை வாய்ப்பு குறித்த கண்காட்சி கருத்தரங்கம்
வேலை வாய்ப்பு குறித்த கண்காட்சி கருத்தரங்கம்
ADDED : ஜன 30, 2024 11:12 PM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலை வாய்ப்பு தொடர்பான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார்.
மண்டல இணை இயக்குனர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக செயல்பாடுகள் குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் விளக்கினார். வேலைவாய்ப்பிற்கான திறன்கள், தயாரிப்புகள் குறித்தும், ராணுவத்தில் பணி புரியவும், சுயவேலை வாய்ப்பு, வங்கிக்கடன் உதவிகள், தன்னார்வ பயிலும் வட்ட செயல்பாடுகள், மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகள், கல்வியின் அவசியம், தனியார் துறை வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.
அலுவலர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் பலரும் உடன் இருந்தனர். முடிவில் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.