ADDED : பிப் 10, 2024 11:47 PM
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தங்கரத்தின மலர் வரவேற்றார்.
ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன், வி.ஏ.ஓ., ரஞ்சித், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் வரதராஜன், ஊராட்சி வார்டு உறுப்பினர் சாமிநாதன், மணிமேகலை, ஆசிரியைகள் ஸ்ரீவித்யா, கார்த்திகா, ஜெகதீஸ்வரி, மேலாண்மை குழு தலைவி கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளிக்கு மின்விசிறி, பிளாஸ்டிக் சேர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.