ADDED : செப் 16, 2025 04:12 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் பொறியாளர் தினவிழா நடந்தது. தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் தெய்வேந்திரன், இப்போபே நிறுவனத்தின் செயல் அலுவலர் மோகன் பங்கேற்று பேசினர்.
துறைத் தலைவர்கள் இயந்திரவியல் எஸ்.கார்த்திகேயன், கணினித்துறை என்.கார்த்திகேயன், முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ஜெயலட்சுமி, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.