ADDED : ஜன 11, 2024 04:17 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் டி-பிளாக் அண்ணல் பாண்டியனார் நாடார் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.தேர்தல் அதிகாரி இன்பராஜ் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தலைவராக முருகேசன், துணைத் தலைவர்கள் சுந்தர்ராஜ், ராமன், செயலாளராக ஞானசேகரன், இணைச் செயலாளர்கள் தமிழ்செல்வம், தர்மராஜ், பொருளாளர் மோகன், கவுரவ ஆலோசகர், சட்ட ஆலோசகர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
வி.ஏ.ஓ., கதிரேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.-----