/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தொண்டி வெள்ளை மணல் தெருவில் குடிநீர் தட்டுப்பாடு தொண்டி வெள்ளை மணல் தெருவில் குடிநீர் தட்டுப்பாடு
தொண்டி வெள்ளை மணல் தெருவில் குடிநீர் தட்டுப்பாடு
தொண்டி வெள்ளை மணல் தெருவில் குடிநீர் தட்டுப்பாடு
தொண்டி வெள்ளை மணல் தெருவில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : ஜூன் 25, 2025 08:47 AM

தொண்டி :தொண்டி வெள்ளை மணல் தெருவில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதிக்கு வரும் குடிநீர் குழாய் செக்போஸ்ட் அருகே உடைப்பு ஏற்பட்டதால் நீர் செல்வதில் தடை ஏற்பட்டது. இதனால் இத் தெருவிற்கு குடிநீர் கிடைக்கவில்லை.
ஐந்து நாட்களாக தண்ணீர் வராததால் வெள்ளைமணல் தெரு மக்கள் சரக்கு வேனில் வரும் குடிநீரை குடம் ரூ.10க்கு வாங்குகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஐந்து நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமமாக உள்ளது.
கோடைகாலம் என்பதால் குடிநீர் தேவை அதிகமாக உள்ளது.
எனவே விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம் என்றனர்.
குழாய் உடைப்பை சரி செய்யும் பணிகள் நடக்கிறது.